< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் சங்க கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

விவசாயிகள் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
13 July 2022 9:44 PM IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலை விவசாயிகள் சங்க கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சாமியாபுரம் கூட்ரோடு தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட மண்டல தலைவர் பெருமாள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், தர்மபுரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் சரவணன், ஏழுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழங்குடியினர் இயற்கை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே 1-ம் வகுப்பில் எஸ்.டி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டியில் ஒழுங்கு முறை விற்பனை நிலையம் தொடங்க வேண்டும். சிறு குறு விவசாய சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பேசினார். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் சேகர், கிருஷ்ணசாமி, ராமர், லட்சுமணன், முத்துசாமி, தங்கராஜ், மாதையன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்