< Back
மாநில செய்திகள்
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
3 July 2022 9:04 PM IST

மாட்லாம்பட்டியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சா எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

காரிமங்கலம்:

காரிமங்கலம் ஒன்றியம் 19-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க. சார்பில் சந்திரா மாதையன் போட்டியிடுகிறார். இடைத்தேர்தல் தொடர்பாக காரிமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாட்லாம்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இன்பசேகரன், தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்.பி.க்கள் தாமரைச்செல்வன், எம்.ஜி. சேகர், பேரூராட்சி தலைவர் மனோகரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, மணி, மாதேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர் சந்திரா மாதையனை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தி.மு.க.வினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக முன்னாள் மாவட்ட அவை தலைவர் மாதையன், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மற்றும் பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் குட்டி ஆகியோரின் உருவப்படங்களை திறந்து வைத்து அவர்களது குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், கோபால், மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், தீபா அன்பழகன், கவுரி திருக்குமரன், விவசாய அணி குமார், மாரியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்