< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
போலீசாரிடம் குறைதீர்க்கும் கூட்டம்
|29 Jun 2022 9:41 PM IST
பாலக்கோட்டில் போலீசாரிடம் குறைதீர்க்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வன் தலைமையில் நடந்தது.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கி பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் ேபாலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கணவன், மனைவி வெவ்வேறு பகுதியில் பணிபுரிந்து வருவதால் இருவரும் ஒரே பகுதியில் பணிபுரிய வழிவகை செய்வது, பணி சுமையால் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் ஆகியவற்றில் முறையாக கவனம் செலுத்துகின்றனரா? ஆகியவை குறித்து தனி தனியாக கேட்டறிந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், இன்ஸ்பெக்டர் தவமணி, கவிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.