< Back
மாநில செய்திகள்
கம்பைநல்லூரில் பேரூராட்சி கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

கம்பைநல்லூரில் பேரூராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
27 Jun 2022 9:25 PM IST

கம்பைநல்லூரில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

மொரப்பூர்:

கம்பைநல்லூரில் பேரூராட்சி கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மதியழகன், செயல் அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குடிநீர், தெருவிளக்குகள், சாலை வசதி, தூய்மை பணி ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என ஆய்வு செய்தனர். தொடர்ந்து பேரூராட்சியில் செயல்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் சரவணன், சங்கீதா ஜெயக்குமார், நந்தினி திருமால், கீதா சேகர், சாந்தி நடராஜன், குமுதா கணேசன், ரமேஷ், குமார், விஜயலட்சுமி சுரேஷ், முருகம்மாள் மாது, அஜந்தா சண்முகம், ஆதிமூலம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி பணியாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்