< Back
மாநில செய்திகள்
மொரப்பூர், கடத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில்காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

மொரப்பூர், கடத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில்காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம்

தினத்தந்தி
|
3 Oct 2023 12:30 AM IST

மொரப்பூர்:

மொரப்பூர், கடத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம் நடந்தது.

இருமத்தூர், சுங்கரஅள்ளி

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் இருமத்தூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் இருமத்தூரில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் என்கிற மாது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேட்டு, கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) சிவக்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டு அடிப்படை தேவைகள், நிறைவேற்றபட வேண்டிய திட்டங்கள், தென்பெண்ணை ஆற்றில் கோழிக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் சுங்கரஅள்ளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சுங்கரஅள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் அபிராமி தமிழரசு தலைமை தாங்கினார். ஒன்றிய பற்றாளர் கலைமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துக்குமரன், துணைத்தலைவர் மணி முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வகுரப்பம்பட்டி, நவலை

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் வகுரப்பம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் முனிராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) செந்தில் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டு அடிப்படை தேவைகள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், தென்பெண்ணை ஆற்றில் கோழிக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நவலை ஊராட்சியின் கிராமசபை கூட்டம் சமத்துவபுரம் பெரியார் திடலில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஜெயந்தி அழகரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தேவி சங்கர் தமிழ்ச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் ஜமுனா ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகள், செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்