< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பள்ளிபாளையம் நகராட்சி கூட்டம்
|1 Aug 2023 12:30 AM IST
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் நகராட்சி கூட்டம் நகராட்சி அரங்கில் நேற்று காலை நடந்தது. ஆணையாளர் தாமரை தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் செல்வம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
பொது நிதி திட்டத்தின் கீழ் நுண் உர மையத்திற்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்குவது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குளோரின் வாங்க ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்குவது, மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் 12, 15, 16, 20 வார்டுகளில் தார்சாலைகளை சீரமைக்க ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்குவது என்பன உள்பட 29 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகராட்சி அலுவலர் அசோக் குமார் நன்றி கூறினார்.