< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பர்கூரில்அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
|26 July 2023 1:15 AM IST
பர்கூர்
மதுரையில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பர்கூரில் நடந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் வரவேற்றார். தம்பிதுரை எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநாடு பற்றியும், மாநாட்டில் பர்கூர் தொகுதியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.