< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா பொருளாதார பிரிவு நிர்வாகிகள் கூட்டம்
சேலம்
மாநில செய்திகள்

பா.ஜனதா பொருளாதார பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

தினத்தந்தி
|
8 March 2023 3:21 AM IST

பா.ஜனதா பொருளாதார பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.

பா.ஜனதா பொருளாதார பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.

நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜனதா கட்சியின் பொருளாதார பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சேலம் குரங்குச்சாவடியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது, தேர்தலின் போது 590 வாக்குறுதிகள் கொடுத்த தி.மு.க. அரசு இதுவரை 20 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற நிர்வாகிகள் தீவிர கட்சி பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திமோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் நாடு பொருளாதாரத்தில் அடைந்த முன்னேற்றம் குறித்து எடுத்துக்கூறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொருளாதார பிரிவின் இலக்கை அடைவதற்கு மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் பயனாளிகளுக்கு சரியாக சென்று சேர்ந்திருக்கிறதா? அப்படி சேராத பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னாள், இந்நாள் வங்கி மேலாளர்கள், அரசு அதிகாரிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து அவர்களது ஆலோசனைப்படி 'மக்களை தேடி மத்திய அரசு' என்ற அடிப்படையில் மக்களை சந்தித்து எடுத்து கூற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோட்ட பொறுப்பாளர்கள்

தொடர்ந்து பொருளாதார பிரிவில் 8 கோட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி வெங்கடேஷ்வரன் (சென்னை), ஞானவேல் (வேலூர்), ரமேஷ் (விழுப்புரம்), தேவ்ஜில் (மதுரை), துரைபாண்டியன் (கோவை), பழனியப்பன் (சேலம்), முத்துராமலிங்கம் (கன்னியாகுமரி), மணிகண்டன் (திருச்சி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் கார்த்தீஸ்வரர் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்