ராமநாதபுரம்
காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது
|காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டதுஎன்று பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.
காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டதுஎன்று பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:- எதிர்கட்சிகள் பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சி என்று விமர்சனம் செய்கின்றன. அதனை மறுப்பதற்கில்லை. பா.ஜ.க. இந்துத்துவா சித்தாந்தத்தை கொண்ட கட்சிதான். ஆனால், இந்துத்துவா என்பது இந்து மதத்தின் வழிபாட்டை செய்யக் கூடிய கட்சி என்பதல்ல.
ஆடி விரதத்தில் இஸ்லாமியர்களாகிய நாங்கள் கலந்து கொண்டு அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறோம்.
அதேபோன்று எங்கள் வழிபாட்டு தலங்களுக்கு இந்து சகோதரர்கள் வரும்போது அவர்களுக்கு மரியாதை அளிக்கிறோம். இதுதான் பாரதத்தின் கலாசசாரம். இந்திய கலாசாரத்தை, பண்பாட்டை பேசுவதுதான் இந்துத்துவா.
இளையான்குடியில் எங்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் என்பது உளவுத்துறை எந்த அளவிற்கு தோல்வி அடைந்து இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. காவல்துறை அனுமதித்த வழித்தடத்தில் உரிய தகவலின் அடிப்படையில் செல்கிறோம்.
அப்போது இதுபோன்ற தாக்குதல் நடக்கிறது என்றால் உளவுத்துறை தூங்கி கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறோம். காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. வாக்கு வங்கிக்காக பயங்கரவாத சக்திகளுக்கு காவல்துறை துணை போகிறது என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட பொது செயலாளர் ஆத்மாகார்த்திக் உடன் இருந்தார்.