< Back
மாநில செய்திகள்
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

நவராத்திரி விழாவையொட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் நவராத்திரியின் 6-ம் நாள் விழாவையொட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பொன்னமராவதி அமரகண்டன் ஊரணி வடக்கு கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலிருந்து மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு சீர் எடுத்துவரப்பட்டது. அதன்பின்னர் மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்