< Back
மாநில செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
திருச்சி
மாநில செய்திகள்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
20 Feb 2023 2:04 AM IST

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.

ஸ்ரீரங்கம்:

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் ஸ்ரீபகவன்நாம பிரசார சேவா மண்டலி சார்பில் 4 நாட்கள் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முதல் நாள் மகாகணபதி ஹோமம், திவ்யநாம சங்கீர்த்தனம், ஊஞ்சல் உற்சவம், 2-ம் நாள் ருக்மணி திருக்கல்யாண வைபவம், பாகவத ஆராதனை, சிவபூஜை, 3-ம் நாளான நேற்று முன்தினம் தேவரா இன்னிசை, சிவதரங்கம், மூவர்தேவாரம், சிவபூஜை, சிவதிவ்யநாம சங்கீர்த்தனம், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 4-ம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. மேலும் சிவ நாமசங்கீர்த்தனம், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேய உற்சவம் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்