மருந்துசீட்டு இல்லாமல் மருந்து விற்றால் கடையின் உரிமம் ரத்து - தமிழக அரசு அதிரடி
|மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் நடத்த சோதனையில் வலி நிவாரணி மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்கப்பட்டதும், பெரும் அளவில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனை அடுத்து அந்த மருத்துகடைக்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை போதை வஸ்துகளாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், மருந்து சீட்டு இல்லாமல் மனநோய், தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.