< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மக்களை தேடி மருத்துவம்
|24 Aug 2022 11:42 PM IST
மக்களை தேடி மருத்துவம் நடந்தது.
கரூர் மாவட்டம் நடையனூர் அருகே சொட்டையூர் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் முகாம் நடந்தது. இதையொட்டி செவிலியர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.