< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மருத்துவம், பொறியியல்... "அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு..!" மத்திய மந்திரி தகவல்
|9 Oct 2022 9:54 PM IST
2 நாள் பயணம் காஞ்சிபுரம் வந்துள்ள மத்திய மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் , தனியார் பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்.
காஞ்சிபுரம்,
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணம் காஞ்சிபுரம் வந்துள்ள மத்திய மந்திரி ராஜ்குமார், தனியார் பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், நீட் தேர்வு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்றும், புதிய கல்விக் கொள்கை மாணவர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்தார்.