< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி
|21 Oct 2023 2:57 AM IST
10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடியை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அகற்றினர்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்-அதிர்ஷ்டலெட்சுமி தம்பதியின் 10 மாத குழந்தை தரனேஷ். இந்த குழந்தை சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மருந்து டப்பாவின் மூடியை விழுங்கியது. இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட டாக்டர்கள் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த மருந்து டப்பா மூடியை அகற்றினர். தற்போது அக்குழந்தையின் உடல் நிலை சீராக உள்ளது.விரைவாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய டாக்டர்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டினார்.