< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
|11 Oct 2023 1:30 AM IST
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணி நேரம் வரையறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலா ளர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதற்கு மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி ேபசுகையில், மக்களை தேடி மருத்துவ பணியாளர்களின் பணி நேரத்தை வரைமுறை செய்ய வேண்டும். காலதாமதம் இன்றி ஊதியம் வழங்க வேண்டும். முதல்- அமைச்சர் அறிவித்த மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000 அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராஜேஸ்வரி, பொருளாளர் அங்காள பரமேஸ்வரி, துணை தலைவர் இந்திரா ராணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.