< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
கடையம் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
|1 Aug 2023 12:15 AM IST
கடையம் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையம்:
கடையம் அருகே பொட்டல்புதூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் சாலையில் வெள்ளிகுளம் பகுதி உள்ளது. இங்கு மக்கள் நடமாட்டம் உள்ள சாலையோரம் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு கிடந்தது. அந்தப் பகுதியில் நாவல் மரங்கள் அதிகம் இருப்பதால் நாவல் பழங்களை எடுப்பதற்காக சிறுவர்கள் அதிக அளவில் அவ்வப்போது வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் காவல்துறையும், துறை சார்ந்த அதிகாரிகளும் கவனித்து இங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும், அந்த கழிவுகளை கொட்டிய நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.