கரூர்
மருத்துவ பணிகள்-மகப்பேறு மரணம் குறித்த ஆய்வுக்கூட்டம்
|மருத்துவ பணிகள்-மகப்பேறு மரணம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் மருத்துவ பணிகள் குறித்தும் மகப்பேறு மரணம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற மகப்பேறு மரணம் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. குழந்தை மரணம் குறித்து ஆய்வு செய்ததில் ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் கண்காணிப்பு செய்யப்பட வேண்டும். கரூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தொற்றாநோய்கள் கண்டறிவது மற்றும் மக்களை தேடி மருத்துவம் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இதில் கண்டறியும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வுசெய்து பிறவி காது கேளாமை போன்ற நோய்கள் கண்டறிதல் துரிதமாக கண்டறிய வேண்டும். மேலும், இரண்டுக்கும் மேற்பட்ட நலமுடன் வாழக்கூடிய குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைத் திருமணம் தடுப்பு பற்றி விவாதிக்கப்பட்டது,
இதில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், இயக்குனர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.