< Back
மாநில செய்திகள்
வேலூரில் மருத்துவ மாணவர்கள் ராகிங்: 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

வேலூரில் மருத்துவ மாணவர்கள் ராகிங்: 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
11 Nov 2022 3:14 PM IST

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரத்தில் 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர்,

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரத்தில் 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாண படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகம், இந்த சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் போலீசாரிடம் புகாரளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பாகாயம் போலீசார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்