< Back
மாநில செய்திகள்
ஆம்பூர் அருகே கார் விபத்தில் மருத்துவ மாணவி பலி - 5 மாணவர்கள் படுகாயம்
மாநில செய்திகள்

ஆம்பூர் அருகே கார் விபத்தில் மருத்துவ மாணவி பலி - 5 மாணவர்கள் படுகாயம்

தினத்தந்தி
|
10 July 2022 6:11 PM IST

ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற சென்னை தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் மாணவி உயிரிழந்தார்.

ஆம்பூர்:

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் விடுமுறையை களிக்க நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா புறப்பட்டனர். காரை நிஷாத் அகமத் (வயது 21) என்பவர் ஓட்டினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் திருப்பதியை சேர்ந்த சத்ய நாராயணன் மகள் சண்முகி உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த நிஷாத் அகமத், அலினா(18), சாஜான்(18), ரித்தின் (20), சுப்ரீத் (19) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் ஆம்பூர் தாலுகா போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்