< Back
மாநில செய்திகள்
கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை
மாநில செய்திகள்

கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை

தினத்தந்தி
|
7 Oct 2023 6:03 AM IST

கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்த இவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இந்தநிலையில், விடுதி அறையில் மாணவி திடீரென இறந்து கிடந்தார்.

நாகர்கோவில்,

தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். வியாபாரி. இவருடைய மகள் சுகிர்தா (வயது 27). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்த இவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இந்தநிலையில், விடுதி அறையில் மாணவி திடீரென இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் அறையில் போலீசார் சோதனை செய்தபோது ஊசி மற்றும் மருந்து சிக்கியது. இதைவைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தசையை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் தன்னுடைய உடலில் செலுத்தி சுகிர்தா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தனது தற்கொலைக்கு காரணமாக மாணவி எழுதி வைத்ததாக உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. மாணவி தற்கொலை தொடர்பாக போலீசார் தீவிர நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்