< Back
மாநில செய்திகள்
மருத்துவ காப்பீட்டு திட்ட குறைதீர்க்கும்  கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீட்டு திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
27 Sept 2023 2:22 AM IST

மருத்துவ காப்பீட்டு திட்ட குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது


விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவின தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டும் மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று (புதன்கிழமை) மதியம் 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது விருதுநகர் இணை இயக்குனர், மாவட்ட மருத்துவ பணிகள் மற்றும் குடும்ப நலம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டு இருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

மேலும் செய்திகள்