திண்டுக்கல்
ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு
|ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு, திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பழகன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் குமாரம்மாள் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். மாநில பொதுச்செயலாளர் மாயமலை மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
இந்த மாநாட்டில் தமிழக அரசின் ஓய்வூதிய விதியின்படி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். மேலும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர்கள் மரியபுஷ்பம், பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.