< Back
மாநில செய்திகள்
திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை

தினத்தந்தி
|
25 July 2022 10:51 PM IST

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

​ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் முன்னிலை வகித்தார். அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 285 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கமுதி தாலுகா சேந்தனேந்தல் கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சந்தனமாரி என்பவரின் வாரிசுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை 6 திருநங்கைகளுக்கும், சமூகநல வாரியத்தின் மூலம் 3 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வழங்கினார்.

மேலும் செய்திகள்