புதுக்கோட்டை
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
|மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
பள்ளிக்கல்வி துறையில் புதுக்கோட்டை வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் 137 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, ஆதார் எண் மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. புதிதாக கண்டெடுக்கப்பட்ட 37 மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன. புதுப்பித்தல் மொத்தமாக 52 மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன. முகாமில் வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரிய பயிற்றுனர்கள், இயன் முறை மருத்துவர் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.