< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தியல் துறையில் இயங்கி வரும் மருந்து பக்கவிளைவுகள் கண்காணிப்பு மையம், இந்திய மருந்தியல் ஆணையம், தேசிய ஒருங்கிணைப்பு மையம் ஆகியன சார்பில் மருந்தியல்சார் புலனாய்வு வார விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி துணை முதல்வர் ஷமீம், மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, மருத்துவ துணைநிலை அதிகாரி பழமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்தியல் துறைத் தலைவர் சுகிர்தா வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் உஷா தலைமை தாங்கி மருந்து பக்கவிளைவுகள் பற்றியும், அதில் பொதுமக்களின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளின் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது மருத்துவமனை வளாக பகுதி மற்றும் மருத்துவமனை சாலை வழியாக சென்றது. இதில் பங்கேற்றவர்கள், இந்திய மருந்தியல்சார் புலனாய்வு திட்டம் மற்றும் மருந்தக கண்காணிப்பு மீது பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள். மேலும் விழிப்புணர்வு நாடகத்தையும் அவர்கள் நடத்தினார்கள்.

இதில் மருந்தியல் துறை இணை பேராசிரியர் அனுஷா, சமூக நல மருத்துவத்துறை தலைவர் பொன்னரசு மற்றும் அனைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவியர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்