சேலம்
மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயற்சி
|களைக்கொல்லி மருந்தை குடித்து மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்
கொண்டலாம்பட்டி:-
சேலம் அம்மாபேட்டை சத்யாநகரை சேர்ந்த குமரன் மகன் பரத் (வயது 22). இவர், தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் பரத் கிரிக்கெட் விளையாடிதாகவும், அப்போது அவர்களுடன் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம், பரத்தை தற்காலிக நீக்கம் செய்ய இருந்ததாக தெரிகிறது. இதனை நண்பர்கள் மூலம் அறிந்த பரத், களைக்கொல்லி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.