சென்னை
திருவொற்றியூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம்
|திருவொற்றியூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் சங்க தலைவர் கஜபதி, பொது செயலாளர் குறிஞ்சி கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார். முகாமில் பொது மருத்துவம், இருதயம், கண், பல், இ.சி.ஜி. சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டன.மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தபின் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது, 'வியாபாரிகள் உடல் நலத்தை கண்டிப்பாக பேணி பாதுகாக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தமிழகம் முழுவதும் உள்ளூரில் உள்ள வணிகர் சங்கங்களுடன் இணைந்து பொது மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.
குக்கிராமங்களில் இருக்கும் வியாபாரிகளும் சர்வதேச அளவில் தங்களது வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக இளம் தொழில் முனைவோர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பாக செப்டம்பர் 23-ந் தேதியன்று துபாயில் வியாபாரிகள் பங்கேற்பு கூட்டம் நடைபெற உள்ளது என கூறினார்.