திருநெல்வேலி
மக்களை தேடி மருத்துவ முகாம்
|விக்கிரமசிங்கபுரத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) துரை உத்தரவுப்படியும், வட்டார மருத்துவர் பீர்வின் குமார் அறிவுறுத்தலின்படியும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அர்ஜுன் தலைமையில் மக்களை தேடி மருத்துவம் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் இணைந்து விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பசுக்கிடைவிளையில் மருத்துவ முகாம் நடத்தியது. நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், துணை தலைவர் திலகா சிற்றரசன் ஆகியோர் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். முகாமில் காசநோய் மற்றும் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. காசநோய் அறிகுறி உள்ள நபர்களை கண்டறிவதற்காக நடமாடும் காசநோய் எக்ஸ்ரே வாகன மூலம் பரிசோதனை செய்யப்பட்டது முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மணி கண்டன், ஜெய ஆனந்த், சந்திரசேகரன் நடமாடும் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.