< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
தர்மபுரி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
4 Feb 2023 1:00 AM IST

பாப்பிரெட்டிப்பட்டி:-

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வட்டார கல்வி அலுவலர் பச்சியப்பன தலைமையில் நடந்தது. முகாமில் சிறுவர், பெரியவர்கள் என 87 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில் கண், காது, ஆர்த்தோ, நியூரோ, பிசியோதெரபிஸ்ட் டாக்டர்கள் கற்பகம், அரவிந்தன், லதா ஆகியோர் பரிசோதித்தனர். இதில் 20 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள், 23 பேருக்கு ெரயில் பாஸ் வழங்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் எழிலரசி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ராஜா, அருணா, ராஜசேகர், இயன் முறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்