< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
18 Aug 2022 1:54 PM GMT

ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

ஆரணி

ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி டவுன், ஆரணி வட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார்.

முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், தசை வலி நிவாரண மருத்துவர், கண்பார்வை சம்பந்தமான மருத்துவர், பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவர் என அனைத்து பிரிவு டாக்டர்களும் கலந்து கொண்டனர்.

இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய அரசால் தனித்துவ அடையாள அட்டைக்காக 300 பேர் பதிவு செய்யப்பட்டது. 185 மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டைகளை மருத்துவ முகாமில் ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கு.இந்திராணி வழங்கினார்.

பகலில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தங்களை அலுவலர்கள் முறையாக கையாளவில்லை என கூறி அலுவலகம் வெளியே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் அவர்களை அழைத்து சமாதானம் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்