< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
8 Aug 2022 5:39 PM GMT

இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

இளையான்குடி,

இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு இளையான்குடி ஒன்றிய தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஊர்க்காவலன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, இளையான்குடி தாசில்தார் அசோக்குமார், இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகிேயார் மருத்துவ பரிசோதனை செய்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இளையான்குடி ஊராட்சிக்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் உபகரணங்கள் பெற 108 பயனாளிகளும், இதர சலுகைகள் பெறுவதற்கு 149 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்