< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
22 Oct 2023 9:00 PM GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நடைபெற்ற இந்த முகாமை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 127 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் மருத்துவ உபகரணங்கள், அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜபிரியன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்