< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
19 Aug 2023 4:05 PM GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த இலவச மருத்துவ முகாம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த இந்த முகாமில் அரசு மருத்துவமனை டாக்டர்களான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அறுவை சிகிச்சை மற்றும் அடையாள அட்டை , உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்தனர். முகாமை மாவட்ட கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, மாவட்ட கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை (தொடக்க கல்வி), கலா ராணி (தனியார் பள்ளிகள்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முகாமில் 83 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 29 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 22 பேருக்கு ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்து 668 மதிப்பில் வங்கி கடன் மானியமும், 21 பேருக்கு ரூ.13 லட்சத்து 56 ஆயிரத்து 200 மதிப்பில் செயற்கை கால்களும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை புதுப்பித்தலுக்கும், யு.டி.யு.டி. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கும் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் குன்னம் வட்டாரத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த இலவச மருத்துவ முகாம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந்தேதி குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்