திருவண்ணாமலை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
|தெள்ளாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
வந்தவாசி
தெள்ளாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
வந்தவாசியை அடுத்த தெள்ளார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை சார்பில் முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண்பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் இயக்கத் திறன் குறைபாடு, அறிவுத்திறன் வளர்ச்சி குறைபாடு உள்ளிட்டவை தொடர்பாக 5 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து குறைபாடு உள்ளவர்களுக்கு குறைபாட்டின் அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.முகாமை தெள்ளார் வட்டாரக் கல்வி அலுவலர் டி.ரங்கநாதன் தொடங்கி வைத்தார். தெள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ஆனந்த், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயசீலன், மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.