திருநெல்வேலி
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
|பழைய பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
பேட்டை:
நெல்லை பழைய பேட்டை மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ், வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செண்பகாதேவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பெல்சிசெல்வபாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு, மனநல மற்றும் குழந்தை நலமருத்துவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேவையான தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லை நகர வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்து இருந்தனர்.