< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
நெல்லை கோர்ட்டில் மருத்துவ முகாம்
|18 July 2022 1:16 AM IST
நெல்லை கோர்ட்டில் மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை கோர்ட்டில் வக்கீல் சங்கம், காவேரி ஆஸ்பத்திரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முகாமை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். இதில் தலைமை குற்றவியல் நீதிபதி மனோஜ்குமார், அரசு வக்கீல்கள் சுப்பிரமணியன், சங்கர், மூத்த வக்கீல்கள் கமலநாதன், ஜெயபிரகாஷ், திருமலையப்பன், வக்கீல் சங்க உதவி தலைவர் சீதா, உதவி செயலாளர் பரமசிவன், சங்க நூலகர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் அஜித், சிதம்பரம், சின்னதுரை, இசக்கி, மகாராஜா, முத்துராஜ், பிரேம்குமார், இந்திராதேவி, தமிழ்செல்வி மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வக்கீல் சங்க பொருளாளர் நெல்சன் ஜெபராஜ் நன்றி கூறினார்.