< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
முத்தையாபுரத்தில் மருத்துவ முகாம்; மேயர் தொடங்கி வைத்தார்
|20 Feb 2023 12:15 AM IST
முத்தையாபுரத்தில் மருத்துவ முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
ஸ்பிக்நகர்:
முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும், தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் ஏ.வி.எஸ். தொடக்க பள்ளியில் முள்ளக்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், நகர் நல அலுவலர் (பொறுப்பு) ஸ்டாலின், முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.