< Back
மாநில செய்திகள்
வேளாண் கல்லூரியில் மருத்துவ முகாம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேளாண் கல்லூரியில் மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
19 Oct 2023 6:45 PM GMT

கீழ்வேளூர் அருகே வேளாண் கல்லூரியில் மருத்துவ முகாம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் ரவி தொடங்கி வைத்தார். இதில் வேளாண் கல்லூரியில் பயிலும் 130 மாணவ-மாணவிகளுக்கு இரத்த அழுத்த பரிசோதனை, எடை மற்றும் உயரம் சரிபார்ப்பு, பொது பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் வலிவலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சபீர் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள், கல்லூரி இணை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்