< Back
மாநில செய்திகள்
சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
13 May 2023 6:45 PM GMT

எருமப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.na

எருமப்பட்டி

எருமப்பட்டி கைகாட்டியில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் எருமப்பட்டி ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை, காச நோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் டெங்கு, மலேரியா, கொரோனா நோய் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லலிதா தலைமையில், மருத்துவர்கள் வினோத், முத்துக்குமார் ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலமுரளி பாபு, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரகுபதி, சுகாதார ஆய்வாளர்கள் யுவராஜ், லிங்கேஸ்வரன் மற்றும் மூத்த காச நோயை சிகிச்சை மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்