< Back
மாநில செய்திகள்
சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
6 May 2023 6:45 PM GMT

ராசிபுரம் போலீஸ் நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராசிபுரம்

ராசிபுரம் போலீஸ் நிலையம் சார்பில் சிறுவர் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாணவ, மாணவிகளுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தோல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தோல் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப் பிரமணியம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்