< Back
மாநில செய்திகள்
யானைக்கால் நோய் அறிகுறி உள்ளதா?கிராமங்களில் பரிசோதனை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

யானைக்கால் நோய் அறிகுறி உள்ளதா?கிராமங்களில் பரிசோதனை

தினத்தந்தி
|
23 April 2023 7:00 PM GMT

யானைக்கால் நோய் அறிகுறி உள்ளதா? என்பது குறித்து கிராமங்களில் பரிசோதனை நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அரசூர், எருக்கூர், விளந்திடசமுத்திரம், அகணி, கடவாசல், நிம்மேலி, ஓலையாம்புத்தூர், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட 9 கிராமங்களில் இரவு நேர மருந்தகம் நடைபெற்றது. இதன் மூலம் யானைக்கால் நோய் அறிகுறி உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், ஆய்வக நுட்பனர் சரவணன், களப்பணியாளர்கள் ராமலிங்கம், சந்திரோதயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரத்த பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கூறுகையில், 'மாலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வீடு வீடாகச்சென்று யானைக்கால் நோய்க்கான அறிகுறி உள்ளதா? என்று ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்து வருகிறோம். இந்நோய் குறித்து மாலை 7 மணிக்கு மேல் 12 மணி வரை ரத்த பரிசோதனை செய்தால் மட்டுமே நோய் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறிய முடியும். பகல் வேளையில் பரிசோதனை செய்வதன் மூலம் இதனை கண்டறிய முடியாது. எனவே தான் இரவு நேரத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை கிராமங்களில் 5402 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது' எனறார்.

மேலும் செய்திகள்