< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
24 Feb 2023 6:45 PM GMT

எருமப்பட்டியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

எருமப்பட்டி

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட உதவி கல்வி திட்ட அலுவலர் குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உடலியல் குறைபாடு, குள்ளத்தன்மை, மனநோய், மூளை சிதவு நோய் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததுடன் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதில் பள்ளி கல்வி திட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் கற்பகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்