< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
19 Feb 2023 6:47 PM GMT

மோகனூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.

மோகனூர்

மோகனூர் ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டையை புதுப்பித்தல், உதவி உபகரணங்கள் தேவைப்படுபவர்களுக்கு பதிவு, அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் பரிந்துரை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கார்டு பதிவு, முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு ஆகிய செயல்பாடுகள் நடைபெற உள்ளன. எனவே மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்டஒன்று முதல் 18 வயது வரை உள்ள அனைத்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் கலந்து கொண்டு பயன்பெறும் படி மோகனூர் வட்டார வள மையத்தின் மூலம் கேட்டு கொள்ளப்படுகிறது. மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஆதார் நகல், அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5, முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் நகல்கள் எடுத்து வந்து பதிவு செய்து பயன் அடையலாம்.

மேலும் செய்திகள்