< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
திருவாரூர்
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
24 Nov 2022 12:45 AM IST

பெரியகொத்தூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

கூத்தாநல்லூர்;

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராமலிங்கம் அறிவுறுத்தலின் பேரில், லெட்சுமாங்குடி கால்நடை மருந்தகத்தின் சார்பில், பெரியகொத்தூர் ஊராட்சியில் கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் கண்ணதாசன் தொடங்கி வைத்து, சிறந்த முறையில் கலப்பின கிடேரி கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கினார். முகாமில் 800- க்கும் மேற்பட்ட அனைத்து வகை கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் அசோகன், வெற்றிவேல், கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்