< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம்
|21 Nov 2022 12:15 AM IST
கடமகுட்டை கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள கடமகுட்டை கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தி பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். மேலும் 18 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் திருலோகசுந்தர், டாக்டர்கள் விமல், சபரீசன் ஆகியோர் சுகாதார நலக்கல்வி மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ரங்கநாதன், ராமச்சந்திரன், நவீன்குமார், சந்தோஷ்குமார், செவிலியர் சத்தியா, சோபியா மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்திருந்தனர்.