< Back
மாநில செய்திகள்
மருத்துவ முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
26 Aug 2022 6:27 PM GMT

மருத்துவ முகாம் நடந்தது

ஆலங்குளம்:

ஆலங்குளம் யூனியன் மேலக்கலங்கல் கிராமத்தில் பொது சுகாதார துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர்கள் அரண்மனைத்தாய் (மேலக்கலங்கல்), சந்திரசேகர் (கீழக்கலங்கல்), ஒன்றிய கவுன்சிலர் செல்வக்கொடி ராஜாமணி, மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் வரவேற்று பேசினார். பொது சுகாதார துறை துணை இயக்குனர் முரளி சங்கர் திட்ட விளக்க உரையாற்றினார். யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் வாழ்த்தி பேசினார்.

பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார். முகாமில் சிறப்பு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி, குழந்தை வளர்ச்சி திட்ட கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை மேலக்கலங்கல் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திர குமார், மணிகண்டன், சிவகுமார், விக்னேஷ் குமார், கலைவாணன், சாம்பேனியல், பகுதி சுகாதார செவிலியர் முருகேஸ்வரி, கிராம சுகாதார செவிலியர் இந்திரா காந்தி மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் செய்து இருந்தனர். மேலக்கலங்கல் துணைத்தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்