< Back
மாநில செய்திகள்
மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
2 Aug 2022 8:46 PM GMT

மருத்துவ முகாம்

விக்கிரமசிங்கபுரம்:

அம்பை வியாபாரிகள் சங்கம், ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாமை அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் நடத்தின.

அம்பை நகர வியாபாரிகள் சங்க தலைவர் பண்ணை சந்திரசேகரன், செயலாளர் அச்சுதன், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். அம்பை நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரபாண்டியன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். ஏற்பாடுகளை அம்பை நகர வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்