< Back
மாநில செய்திகள்
மருத்துவ முகாம்
திருப்பூர்
மாநில செய்திகள்

மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
2 Aug 2022 12:29 PM GMT

மருத்துவ முகாம்

உடுமலை

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுமற்றும் எரிசனம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நடமாடும் மருத்துவ மனை ஆகியவற்றின் சார்பில் ஆனைமலை புலிகள் காப்பகம், பொருப்பாறு மற்றும் கோடந்தூர் ஆகிய மலைவாழ்மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான உடுமலை சப்-கோர்ட்டு நீதிபதி எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் கே.விஜயகுமார், ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் எரிசனம்பட்டி வட்டார நடமாடும் மருத்துவமனை டாக்டர் உமாராணி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 109 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்உள்ளதா என்ற பரிசோதனைளும் செய்யப்பட்டது. முகாமில் 2 கர்ப்பிணி களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் பொதுவான தலைவலி, கை, கால்வலி ஆகியவற்றிற்கு மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
மேலும் செய்திகள்