< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
15 July 2022 5:01 PM GMT

கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், வருகை பதிவேடு, தலைமை ஆசிரியரின் அன்றாட பணிகள், ஆண்டு திட்ட அறிக்கை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன. பின்னர் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு உடல் எடை, சர்க்கரை, ஆக்சிஜன் அளவு மற்றும் முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக மாநிலம், பெங்களூரு இவானி பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர். மணிகண்டன் தலைமையிலான மருத்துவமனை பணியாளர்கள் பரிசோதனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆனந்தன், மணிமேகலை, அமுதா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் அன்புமணி கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்